Article (கட்டுரை):
காலைல எழுந்த உடனே வாட்ஸ்அப் குரூப்ல வர்ற மெசேஜை, உண்மைத்தன்மை என்னனு கூட செக் பண்ணாம அப்படியே நாலு பேருக்கு ஃபார்வேர்டு பண்ற பழக்கம் உங்களுக்கு இருக்கா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத் தான்!
"நான் சும்மா தான சார் ஃபார்வேர்டு பண்ணேன், எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல" என்று போலீஸிடம் சொன்னால் இனி எடுபடாது.
புதிய BNS சட்டம் மற்றும் IT Act என்ன சொல்கிறது?
ஒரு அரசியல் தலைவரைப் பற்றியோ, ஒரு சமூகத்தைப் பற்றியோ வதந்தி (Fake News) பரப்புவது, அல்லது மார்ஃபிங் செய்யப்பட்ட (Morphed) புகைப்படங்களை பகிர்வது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாற வாய்ப்புள்ளது.
BNS செக்ஷன் 353: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பினால் கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை உறுதி.
யாரோ உருவாக்கிய பொய்யான செய்தியை, நீங்கள் வெறும் Forward செய்திருந்தாலும் சட்டத்தின் பார்வையில் நீங்களும் குற்றவாளியே!
ஒரு மெசேஜ் அல்லது வீடியோவை ஷேர் செய்யும் முன், அது உண்மையா என்பதை ஒரு நிமிடம் யோசியுங்கள். லைக்ஸ் மற்றும் ஷேர்களுக்காக வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள்! இந்த முக்கியமான தகவலை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

0 Comments